மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!!

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!!

சிறுநீரக கற்கள் என்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். சிறுநீரில் அதிக கால்சியம்,உப்பு அல்லது பிற தாதுக்கள் சேர்வதால் இந்த கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் ஆகும்.

சிறுநீர் கற்கள் இருந்தால் சிறுநீரில் ரத்தம், முதுகு பகுதியில் வலி,வாந்தி,குமட்டல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

சிறுநீர் கற்களுக்கான சிகிச்சை என்பது சிறுநீர் கற்களின் அளவு மற்றும் வகையைப் பொறுத்தது. சிறிய கற்கள் இருந்தால் அது சிறுநீருடன் தானாக வெளியேறும். பெரிய கற்களுக்கு மருந்து,அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

✨️பிரியாணி இலை – ஒன்று
✨️ஏலக்காய் – ஒன்று
✨️தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

👉 பிரியாணி இலைகள் மற்றும் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.

👉 இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

👉 இந்த பானம் நன்றாக கொதித்த பிறகு, அதை ஒரு கிளாஸில் வடிகட்டவும். இந்த பானத்தை குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும்.

👉 இதேபோன்று சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்பு சிறுநீர் பாதையை தூய்மைப்படுத்தி கற்களை வெளியேற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

✨️பெரிய நெல்லிக்காய் – ஒன்று
✨️வெண்பூசணி துண்டுகள் – கால் கப்
✨️அருகம்புல் – சிறிது
✨️மாதுளை – கால் கப்

செய்முறை விளக்கம்:-

👉 முதலில், ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கவும். அடுத்து, ஒரு வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

👉 பின்னர், தேவையான அளவு அருகம் புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், மாதுளை பழத்தை வெட்டி அதன் விதைகளை சேகரிக்கவும்.

👉 பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் வெண்பூசணி துண்டுகளை சேர்த்து அரைக்கவும்.

👉 அதன் பிறகு, அருகம் புல் மற்றும் மாதுளை பழத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாறு பதத்திற்கு அரைக்கவும். இந்த சாற்றை வடிகட்டி குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும்.