ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களால் நீங்கள்…??? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களால் நீங்கள்...??? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...!!!

ஆஸ்துமா மூச்சுக்குழாய் சுருங்குவதால் ஏற்படுகிறது. இது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த ஆஸ்துமா சிலருக்கு நாள்பட்ட ஆஸ்துமாவாகவும் ,சிலருக்கு ஒவ்வாமையினால் ஏற்படக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் சிலருக்கு மரபியல் ரீதியாக இருக்கிறது.ஆஸ்துமா என்பது சுவாச மண்டலத்தில் உருவாகும் ஒரு நோயாகும். பெண்களை விட ஆண்கள் பெரும்பாலும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை:

👉காலையில் பால் குடிப்பதை தவிர்க்கவும்.

👉பல் துலக்கிய பின் முதலில் இரண்டு கப் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.

👉வெள்ளை பாலை விட டார்க் டீ/காபி குடிப்பது நல்லது.

👉ஆஸ்துமா உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிட்டால் அஜீரணம், வயிறு உப்புசம் ஏற்பட்டு உடனே மூச்சுத் திணறல் வரும்.

👉மிகவும் குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

👉இரவு உணவை ஏழு மணிக்கு முன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉தயிர், பால்/குளிர் பானங்களை இரவில் தவிர்க்கலாம்.

👉இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

👉பூண்டுச் சேர்த்த அரிசி கஞ்சி சாப்பிடலாம். பாலில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அருந்தலாம்.

👉தண்ணீரை மாற்றி மாற்றி குடிப்பதாலும் சளி தொந்தரவு வரலாம். இதனால் ஒரே தண்ணீரை குடிக்க வேண்டும்

👉கற்பூரவள்ளி, துளசி, கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்த கசாயத்தை அருந்தலாம். இதனால் சளி வெளியேறி சுவாசம் புத்துணர்ச்சி பெறும்.

👉நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கிழங்குகள் மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

👉தினமும் மாலையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம்,பகலில் சிறிது மாதுளை, அண்ணாச்சி துண்டை மிளகு சேர்த்து சாப்பிடலாம்.

👉இரவில் சுக்கு கஷாயம் சாப்பிடலாம்.