சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது.

அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் அதன் முதல் உணவகத்தைத் தொடங்கிய ஜம்போ குழுமம் சிங்கப்பூரின் பல பகுதிகளில் இயங்கி வருகிறது.

செந்தோசா தீவு, சாங்கிவிமான நிலையம், ஆர்ச்சர்ட், டெம்ப்ஸி ஹில், ரிவர் வாக் உட்பட மொத்தம் 7 உணவகங்களை சங்கம் நடத்தி வருகிறது.

உணவகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரான தேசிய பூங்கா கழகம் ஈஸ்ட் கோஸ்டில் உணவகங்கள் இருக்கும் பகுதியோடு அவ்வட்டாரத்தை முழுமையாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜம்போ குழுமம் குறிப்பிட்டுள்ளது.

குத்தகைக் காலம் முடிந்த பிறகு உணவகம் மூடப்படும். செப்டம்பர் 30ஆம் தேதியுடன் இது முடிவடையும் எனவும், நிதி ஆண்டில் லாபத்தில் எந்த ஒரு பாதிப்பையும் இது ஏற்படுத்தாது எனவும் குழுமம் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK