சிங்கப்பூரில் ஒரு சிறிய லாரி சாலையில் சறுக்கி சாலையோரத்தில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
லாரியின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டுள்ளார். 50 வயதான அந்த ஓட்டுநர் அதிலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதில் ஒரு சாம்பல் நிறம் மினிவேன் தெருவிளக்கு கம்பத்தில் மோதியதும் மோதலின் வேகத்தின் காரணமாக அதன் முன் வலது கதவு சாலையின் குறுக்கே உள்ள மையத்தட்டில் தூக்கி வீசப்பட்டது தெரிகிறது.
மேலும் தெருவிளக்கு கம்பம் கீழே விழுந்ததால் போக்குவரத்து அங்கு தடைபட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படை (SCDF) கூறியதாவது: ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருந்தார், அவர் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
மேலும் மற்றொரு நபருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு அழைத்த போது அவர் மறுத்து விட்டதாகவும் SCDF கூறியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வேன் தானாகவே சறுக்கி இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தற்பொழுது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையைக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.