ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் சொத்துகளை பறிகொடுக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு: திருச்சியில் செயல்படும் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதிக பணத்தை இழந்துவிட்டேன். இதனால் இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு களில் ஈடுபடுவதில்லை என முடிவு எடுத்து உள் ளேன்.
2024-ம் ஆண்டுக்கான எனது வருமானமாக ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் என காட்டி இருந்தேன். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நான் இழந்த தொகைக்கு வருமானவரி கணக்கில் கட்டவில்லை என்று கூறி வருமானவரித்துறையினர் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனது வங்கிக்கணக்கை முடக்கி உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், இந்த விளையாட்டுகள் தங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் தங்கள் சொத்துக்களை பறிகொடுக்கவும் நேரிடும்.
மனுதாரர் ரூ.2 கோடியை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாகவும், ரூ.54 லட்சத்தை இந்த தொகைகளை கூட்டியதில் குழப்பம் உள்ளது. மட்டுமே வென்றதாகவும் கூறி உள்ளார். ஆனால் எனவே மனுதாரர் வருமானவரித்துறை அதிகாரி களிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அந்த மனுவை வருமானவரித்துறை அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மனுதாரரின் வங்கிக்கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.