சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.

போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூட்ட நெரிசல் காரணமாக தமது தாயாருடன் முன்னோக்கி நடந்து கொண்டிருந்த அந்த 8 வயது சிறுமி வழியில் ஹோ ஹுய் லிங் என்ற அந்தப் பெண்ணை லேசாக மோதியுள்ளார்.

அதற்காக கோபமடைந்த அப்பெண் அந்தச் சிறுமியைத் துரத்தி சென்று மிக வேகமாக அருகில் இருந்த சுவரின் மீது வலுக்கட்டாயமாக தள்ளி உள்ளார்.

அவ்வாறு அந்த பெண் தள்ளியதில் அந்த சிறுமிக்கு தலையிலும் தோள்பட்டையிலும் பலத்த வலி ஏற்பட்ட அவர் ஆழத் தொடங்கியுள்ளார்.

அச்செயலுக்கு மன்னிப்பு கேட்காமல் அந்தப் பெண் சிறுமியின் தாயிடம் அவள் என்னை தள்ளியதால் அவ்வாறு நான் செய்தேன் என்று கூறி சென்றுள்ளார்.

இதனால் அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் சிறுமிக்கு எதிராக முரட்டத்தனமாக செயல் புரிந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

MRT நிலையங்களில் கூட்ட நெரிசலின் போது ஒருவர் மீது ஒருவர் எதிர்பாராமல் இடித்துக் கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், சிறுமியை ஹோ அவ்வாறு செய்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK