ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!!
அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது.
அப்படியான ரயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமை கள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடி யோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் இந்திய ரயில்வேயின் உடைமை விதிகளை வெளியிட்டு இருக்கிறது.
அந்த சமூக வலைதளப்பக் ‘பயணத்திற்கு தெரியுமா? இந்திய ரயில்வே ரெடியா? ‘லக்கேஜ் லிமிட்’ இலவச ‘லக்கேஜ்’ அளவு யில் ஒவ்வொரு வகுப்புக்கும் உண்டு, கொஞ்சம் கூடுதலாக இருந்தால், செலுத்தி எடுத்துச்செல்லலாம்.
ஆனால், அளவை தாண்டினால் அபராதம் கட்டவேண்டி வரும். அளவோடு ‘பேக்’ பண்ணுங்க. அசத்தலா பயணம் செய்யுங்க. குறைவான உடைமைகள்.! நிறைவான பயணம்’ ! என்ற விழிப்புணர்வு வாசகத்தை பதிவு செய்து எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம் என்பது குறித்த வீடியோவை யும் பகிர்ந்திருக்கிறது.
அனுமதிக்கப்படும் உடைமைகள் அந்த வீடியோவில், முதல் ஏ.சி. வகுப்பு பெட்டியில் ஒரு பயணி 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 40 கிலோ வரையிலும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 40 கிலோ வரையிலான பெட்டியில் 35 கிலோ லும், 2-ம் வகுப்பு அமரும் வகையிலான பெட்டியில் 35 கிலோ வரையிலும் கொண்டு செல்லலாம்.
கூடுதல் அனுமதியாக பயணிகள் கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்து செல்லலாம். இதற்கு சாதாரண உடைமை கட்டணத்தைபோல் மடங்கு செலுத்தவேண்டும். இந்த கூடுதல் அனுமதி வரம்புக்குள் கொண்டுவரப்படும் உடைமைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது.
அனுமதி வரம்பையும் தாண்டி இந்த இலவச மற்றும் கூடுதல் உடைமைகளை எடுத்துச் சென்றாலோ அல்லது முன்பதிவு செய்யாமல் உடைமைகளை ரயில்வே விதிகளின்படி எடுத்துச் சென்றாலோ அபராத கட்டணம் வசூலிக்கப் படும் என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது.