சிங்கப்பூரில் பிப்ரவரி 24ஆம் தேதி youtrip சேவை தடைப்பட்டது.
இந்த நேரத்தில் ஜப்பானுக்கு சென்று இருந்த ஒருவர் ஏழு முறை அதிவேக ரயிலின் பயண சீட்டுக்கு பணம் செலுத்த முயன்ற போது அவரால் பணம் செலுத்த இயலவில்லை. இதனால் அவருடைய கணக்கில் இருந்து $1600 குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
Youtrip என்ற e-wallet பயனாளர்கள் சிலரிடமிருந்து தவறுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தது
தடைபட்ட பணம் பரிவர்த்தனைக்கும் பயனாளர்களின் youtrip கணக்கிலிருந்து பணம் வசூலிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயனாளர்கள் பலரும் இணையத்தில் தங்களது அனுபவங்களை பதிவிட்டு நிலையில் அவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக youtrip நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) கூறியது.
எத்தனை பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த தகவல் சரியாக வெளிவரவில்லை.
Youtrip பயன்: இதன் மூலம் பயனர்கள் வெளிநாட்டு செலவுக்கு இந்த கணக்கு வாயிலாக பணம் செலுத்திக் கொள்ளலாம். இந்த கணக்கில் இரந்து மற்ற நாடுகளில் நாணயத்தை சேமித்து வைத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.