சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1.55 மாத போனஸ்... குறைந்த ஊதியம் பெறுவோருக்கு கூடுதலாக S$600!


சிங்கப்பூரில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் 1.55 மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனுடன் 13ஆவது மாத சம்பளமாக ஒரு மாத போனஸும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதியில் கூடுதல் நிதிப் பலனைப் பெறவுள்ளனர். குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு மேலும் கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
👉 MX15 மற்றும் MX16 பிரிவுகளைச் சேர்ந்த இளநிலை அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமுறை S$600 வழங்கப்படும்.
👉Operations Support Scheme திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் கூடுதலாக S$600 வழங்கப்படும்.
👉MX13(I) மற்றும் MX14 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒருமுறை S$300 கூடுதல் போனஸாக வழங்கப்படும்.
சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 6 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன் தேசிய ஊதிய மன்றத்தின் (National Wages Council) ஊதிய வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொண்டு, பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த போனஸ் முடிவு எடுக்கப்பட்டதாகப் பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில், படிப்படியான போனஸ் வழங்கும் முறையை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
இதன் மூலம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொதுவான போனஸ் வழங்கப்படுவதுடன், குறைந்த ஊதியம் பெறும் பிரிவினருக்கு கூடுதல் நிதி உதவியும் கிடைக்கிறது.
ஆண்டிறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போனஸ், சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
