சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது.

இயந்திரம் நடுவே நின்றதால், அதில் இருந்தவர்கள் மேலே தொங்கிய நிலையிலேயே சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பின்னர் பூங்கா ஊழியர்கள் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இயந்திரத்தை மெதுவாக கீழே இறக்கினர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த 6 மாதங்களில் ‘Wild Twister’ இயந்திரம் பழுதடைவது இது இரண்டாவது முறையாகும்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து,அந்த இயந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவான சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.