தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!!

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!!

சிங்கப்பூர்:தஞ்சோங் பகார் பிளாசாவில் அண்மைய மாதங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட 10 மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சில நிலையங்கள் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி எம்.பி. ஃபூ செச்சியாங், இந்த மூடல்கள் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிளாசாவை புத்துயிரூட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

பாலர் பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் நடந்து வந்த சேவை மையங்களால் பெற்றோர் சங்கடம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டபூர்வமான மசாஜ் சென்டர் சேவைகளை முற்றாக அகற்றுவது நோக்கமல்ல.ஆனால் சட்டவிரோத சேவைகளுக்குப் பதிலாக குடியிருப்பாளர்களுக்கு ஏற்ற கடைகள் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாதங்களில் மசாஜ் சென்டர்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தல் சட்டம் மற்றும் மகளிர் சாசனம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நடவடிக்கையில் 8 மசாஜ் சென்டர்கள் உரிமம் என்று செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.