குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!!

குகையே கனவு வீடு...!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்த்தா என்ற 78 வயது மூதாட்டி, குகைக்குள் கட்டப்பட்ட வசதியான வீட்டில் வசிக்கிறார்.

மாநகர் ஒன்றின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நவீன, ஆடம்பர வீட்டில் வசித்து வந்த மார்த்தா, பொறியாளர்களின் உதவியுடன் இந்த குகை குடியிருப்ப்பை உருவாக்கியிருக்கிறார்.

தனிமையான, மலைகளால் சூழப்பட்ட இந்த வீடு, தனக்கு அமைதியையும், மாசில்லாத சூழலையும் வழங்குவதாக மார்த்தா கூறுகிறார்.குகை வீட்டின் நன்மைகளாக மேலும் சில விஷயங்கள் கூறப்படுகின்றன.

அவை…வெளியே வெயில் அல்லது குளிர் எவ்வளவு இருந்தாலும், குகை வீட்டுக்குள் எப்போதும் வெப்பநிலை ஒரே சீராக, இதமாக 20 டிகிரியில்தான் இருக்கும்.குளிர்சாதனம் அல்லது வெப்பமூட்டிக்காக மின்சாரம் செலவிட வேண்டியதில்லை.

மேற்கூரை, சுவர்கள், தூண்களுக்கான செலவு இல்லை என்பதால் பொருளாதார ரீதியாகவும், இயற்கையோடு ஒன்றிய து என்பதால் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறப்பானது.அதிவேக இணையம் உள்ளிட்ட நவீன வசதிகள் இருப்பதால், ஒரு குகைக்குள் வசிக்கும் உணர்வே இருக்காது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK