சிங்கப்பூரில் 28 வயது இளைஞர் நபர் கைது..!!
காரணம் என்ன..??
சிங்கப்பூர் காவல்துறை உதவி எண்ணிற்கு 18 முறை அழைப்பு விடுத்து அடையாளம் தெரியாத நபர் கேலிக்கை செய்யும் விதத்தில் பேசி இருக்கிறார். மேலும் அந்த நபர் காவல்துறை வாகனங்கள் மீது முட்டைகளை வீசி சேதப்படுத்தி இருக்கிறார்.
பிப்ரவரி 3 முதல் மார்ச் 22 வரை காவல்துறைக்கு 18 தவறான காவல் புகார்கள் வந்ததாக நேற்று (மார்ச் 24) அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் இந்த புகார்களுக்கு பதில் அளித்த போது அவர்களது காவல் வாகனங்கள் மீது முட்டை வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணையை தொடர்ந்தபோது, ஆங் மோ கியோ காவல் பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்ட 28 வயது இளைஞரை அடையாளம் கண்டு மார்ச் 23ஆம் தேதி கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, அந்த நபர் தொலைந்து போன அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரு கைபேசி எண்ணிற்கு விண்ணப்பித்த வாங்கியதாகவும் அந்த எண்ணெய் பயன்படுத்தி குற்றத்தை பற்றி புகார் அளிக்க காவல்துறை உதவி எண்ணை அழைத்ததாக தெரியவந்தது.
இன்று (மார்ச் 25) 1966 ஆம் ஆண்டு பொதுச்சொத்து சேவை சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ், கைது செய்யப்பட்ட நபர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட உள்ளது. மேலும் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 2000 வெள்ளி வரை அபராதமும் மேலும் 3 முதல் 8 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.