சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 34 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 34 வயது நபர் கைது..!!

சந்திர புத்தாண்டு தொடங்கிய முதல் நாள் காவல்துறை போடப்பட்ட சாலை தடைகளை விதிகளை மீறி ஒரு சிவப்பு கார் நிற்காமல் கல்லாங் பயா லெபார் விரைவு சாலையை நோக்கி செல்லும் விமான நிலைய சாலை பிரிவில் உள்ள சாலை தடுப்பை கடந்து பிப்ரவரி 17ஆம் தேதி அதிகாலை 2: 45 மணியளவில் வேகமாக சென்றது.

காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து சென்று கார் ஓட்டுனரை பிடிக்க முயன்றனர். அப்போது பலமுறை சிவப்பு விளக்குகளை இயக்கியும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியும் சென்ற அவர் இறுதியாக எட்ஜெல் பகுதியில் காரை விட்டு தப்பி ஓடி விட்டார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை அடையாளம் கண்டு (பிப்ரவரி 24ஆம் தேதி) நேற்று அவரை கைது செய்தனர்.

காவல்துறையினர் ஓட்டுநரை விசாரித்த போது அவர் ஓட்டி வந்த காரின் பதிவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காப்பீடு இல்லாத வாகனத்தை ஓட்டியதாலும் ஆபத்தான முறையில் காரை இயக்கி போலீஸ் சாலை தடையை தவிர்த்த காரணத்தினாலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நாளை (பிப்ரவரி 26 ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இது போன்ற பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது மற்றும் மற்ற சாலை பயனாளர்களின் பாதுகாப்பிற்கு தொந்தரவாக இருக்கும் விதத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்போம் என்பதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK