அதிர்ச்சி வீடியோ வைரல்...!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மவுல்மைன் சாலையில், 9 வயது சிறுவன் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாமல் சாலையை கடக்க முயன்றபோது, ஒரு கார் மோதி அவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
எஸ்ஜி ரோடு விஜிலன்ட் யூடியூப்பில் பகிர்ந்துள்ள வீடியோவில், பள்ளி சீருடையில் இருந்த ஒரு சிறுவன் மவுல்மைன் சாலையில் விதிகளை பின்பற்றாமல் சாலையைக் கடப்பது தெளிவாக தெரிகிறது.
சாலையில் மூன்று பாதைகள் உள்ளன. மேலும் ஒரு கருப்பு நிற கார் தப்பிக்க முடியாமல் வலதுபுறப் பாதையில் இருந்த சிறுவன் மீது மோதியது.