லீ குவான் யூ உலக நகர விருது..!! எந்த நகரம் வென்றது..??

லீ குவான் யூ உலக நகர விருது..!! எந்த நகரம் வென்றது..??

சிங்கப்பூரில் நகர சீரமைப்பு ஆணையமும் வசிப்பதற்கு ஏற்ற நகரங்கள் நிலையமும் லீ குவான் யூ உலக நகர விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விருதானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

தற்போது இந்த விருது எட்டாவது முறையாக 8-வது முறையாக நடைபெற்றுள்ளது.

இந்த முறை உலக நகர விருதை லண்டன் வென்று இருக்கிறது. நகர்ப்புற தீர்வுகளை மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரமானது லண்டனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வழங்கப்பட்ட காரணம்:
புத்தாக்கமிக்க, நீடித்து நிலைக்கக்கூடிய நகரத்தையும், தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக லண்டனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

32 பிரிவுகளில் வசிக்கும் 9 மில்லியன் க்கும் மேற்பட்ட மக்களை நிர்வாகிப்பதில் இருக்கும் சவால்களைத் தாண்டி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

மத்திய லண்டனில் மிக குறைவான கரிம வெளியேற்றத்தைக் கொண்ட வட்டாரமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு வசிப்பவர்களுக்கான காற்றின் தரமானது மேம்பட்டு உள்ளது.

சிறப்பு பாராட்டு வழங்கப்பட்ட நகரங்களின் பெயர்கள்:
ஆண்ட்வெர்ப், புடாப் வெஸ்ட், தைப்பே, தியான்ஜின், குவாங்சோ

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK