சாமை அரிசியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..?? இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க...!!!

நமது உடலின் தலை முதல் கால் வரை ஒவ்வொரு பகுதியிலும் புரதங்கள் காணப்படுகின்றன. அவை செல்களை உருவாக்கவும் சரிசெய்யவும் உதவுகின்றன.
புரதக் குறைபாடு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இதை ஈடுசெய்ய நீங்கள் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, உங்கள் உணவில் சாமை அரிசியைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள புரதக் குறைபாட்டையும் பூர்த்தி செய்யலாம்.
புரதத்தைத் தவிர, கால்சியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் இந்த அரிசியில் காணப்படுகின்றன. இது உடலை உற்சாகமாக வைத்திருக்கிறது. இது உடலில் புரத உட்கொள்ளலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எலும்புகள் மற்றும் தசைகளையும் பலப்படுத்துகிறது.
சாமை அரிசியில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளும் இதை சாப்பிடலாம். ஆனால் அதற்கு முன், நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுகவும். மேலும் சாமையில் இயற்கையான சுண்ணாம்பு சத்து உள்ளதால் அது எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.
சாமை அரிசியில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்லது. அதே நேரத்தில்,சாமை அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன.இது கொழுப்பின் அளவைக் குறைத்து இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
100 கிராம் சாமையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
🔶️புரதம் -9.7 கிராம்
🔶️நார்ச்சத்து -7.6 கிராம்
🔶️கார்போஹைட்ரேட்டுகள் -60.9 கிராம்
🔶️கொழுப்பு -5.2
🔶️கால்சியம் -17.மிகி
🔶️இரும்பு -9.3 மிகி
🔶️தயமின் -0.30 மிகி
🔶️நியாசின் -3.2 மிகி
🔶️ரைபோஃப்ளேவின் -0.09 மிகி
சாமையை உண்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள்:
✨️ இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது
✨️ மலச்சிக்கலை போக்கும்
✨️ உடல் தசையை வலுவாக்குகிறது
✨️ எலும்புகளை பலப்படுத்துகிறது
✨️ ஆண்மை குறைவை நீக்கும்
✨️ கருப்பை ஆரோக்கியம்
✨️ மாதவிடாய் சுழற்சி
✨️ புத்துணர்ச்சி
✨️ இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தும்
✨️ ஜீரண சக்தியை அதிகரிக்கும்

Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan