ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது...!!!

ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் உள்ள சில பொது கழிப்பறைகளை கலைஞர் உலானா சுவிட்டுச்சா புகைப்படம் எடுத்தார்.
இதற்காக அவருக்கு Sony World Photography Awards போட்டியில் விருது கிடைத்துள்ளது.
கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பிரிவில் கழிப்பறைகளின் 17 படங்களை அவர் சமர்ப்பித்தார்.
அவர் சமர்ப்பித்த கழிப்பறைகளின் புகைப்படங்கள் அனைத்தும் சாதாரண கழிப்பறையின் புகைப்படம் அல்ல…
தோக்கியோவின் மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக கழிப்பறைகள் 2018 மற்றும் 2023 க்கு இடையில் கட்டப்பட்டன.
கழிப்பறைகளை வடிவமைக்க 16 கட்டிடக் கலைஞர்கள் ஈடுபட்டனர்.ஒவ்வொரு கழிப்பறைக்கும் ஒரு கதை இருக்கிறதாம்.
உதாரணமாக, நீங்கள் ஒரு காலியான கழிப்பறையை வெளியே பார்த்தால், கண்ணாடி சுவர்கள் வழியாக கழிப்பறை தொட்டி உட்பட எல்லாவற்றையும் பார்க்கலாம்.
ஆனால் அதுவே யாராவது உள்ளே இருந்தால், ஒன்றுமே தெரியாதாம்.
சுவிட்டுச்சா எடுத்த இன்னொரு படத்தில், குரலைப் பயன்படுத்தி இயக்கக்கூடிய ஒரு கழிப்பறை இருந்தது.
அந்த கழிப்பறைக்குச் செல்பவர்கள் தங்களின் குரலைப் பயன்படுத்தி கதவைத் திறந்து மூடுவது போன்ற அமைப்பு இருந்தது.
கருப்பு-வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட படங்கள் ஜப்பானிய கட்டிடக்கலை மற்றும் நாட்டின் சமூகத் திட்டத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
