சோவா சூ காங்கில் 2 மீட்டர் நீள மலைப்பாம்பு! குடியிருப்புப் பகுதியில் நடந்தது என்ன?

சோவா சூ காங்கில் 2 மீட்டர் நீள மலைப்பாம்பு! குடியிருப்புப் பகுதியில் நடந்தது என்ன?

சிங்கப்பூர் சோவா சூ காங் (Choa Chu Kang) பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில் பெரிய மலைப்பாம்பு ஒன்று காணப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி காலை, சோவா சூ காங் ஸ்ட்ரீட் 62, புளோக் 606 அருகே சுமார் 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பொதுமக்கள் கவனித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பாம்பின் புகைப்படங்களையும் காணொளியையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பாம்பு பின்னர் அருகிலுள்ள புளோக் 605 பகுதியில் மிதிவண்டி நிறுத்தும் இடத்தின் கீழ் சுருண்டு கிடந்ததாகவும் மற்ற குடியிருப்பாளர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களிடையே கவலை ஏற்பட்டது.
இதையடுத்து, விலங்குகள் மற்றும் கால்நடை மருத்துவச் சேவைப் பிரிவு (AVS) அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். தேசியப் பூங்காக் கழகம் (NParks) அளித்த தகவலின்படி, அது விஷமற்ற ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு (Reticulated Python) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தொடர்புடைய 41 வயது ஆண் பேருந்து ஓட்டுநர், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து SMRT பேருந்துப் பிரிவின் துணை நிர்வாக இயக்குநர் நை செங் கியோங் (Nai Zheng Qiang) விளக்கமளித்துள்ளார்.

சம்பவத்தின்போது, SMRT-யின் 61ஆம் எண் பேருந்து தெற்கு பிரிட்ஜ் சாலையில் சென்றுகொண்டிருந்ததாகவும், போக்குவரத்துக்கு இடையே சாலையைக் கடந்து சென்ற பாதசாரி மீது பேருந்து மோதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாம்புகளைக் காண நேரிட்டால் பதற்றமடையாமல் பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும். பாம்பை நெருங்கவோ, தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது. அதேபோல், செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்பவர்கள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாம்புகள் தொடர்பாக உதவி தேவைப்படும் பொதுமக்கள் NParks விலங்கு அவசர உதவி மையத்தை 1800-476-1600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.