நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து...!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்...!!!

நைஜீரியாவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.
நேற்று நடந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை.
பேருந்து ஓட்டுநர் அதிக களைப்பு அல்லது வேகமாக ஓட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பேருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் சாலை விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துகள் நிகழ்ந்து அதில் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
