சிங்கப்பூர் MRT பாதையில் சேவை தடங்கல்..!! பயணிகள் அவதி..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பரபரப்பான MRT பாதையில் இன்று (ஜூலை 8) காலை ஏற்பட்ட தற்காலிக கோளாறு காரணமாக பயணிகள் தாமதம் மற்றும் நெரிசலுக்கு ஆளாகினர்.
தோ பாயோ மற்றும் சோமர்செட் நிலையங்கள் இடையேயான வடக்கு-தெற்கு பாதை வழித்தடத்தில், சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சுமார் 15 நிமிடங்கள் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
காலை 9.44 மணியளவில், இந்த கோளாறு தொடர்பான தகவலை SMRT நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறால், தோ பாயோ மற்றும் சோமர்செட் இடையேயான பாதையில் சேவை தடங்கல் ஏற்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.