அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!!
ஆஸ்திரியா:மில்லியன் கணக்கான மதிப்புள்ள போர்ஷே கரேரா ஜிடி சூப்பர் காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ஆல்ப்ஸின் அழகிய போஸ்டல்ம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து காட்டுக்குள் சறுக்கிய பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஜூலை 11 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் சால்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ட்ரோபில்மில் இந்த விபத்து ஏற்பட்டதாக, உள்ளூர் தன்னார்வ தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
விபத்து மற்றும் மீட்பு: மஞ்சள் நிறத்தில் வந்த கரேரா ஜிடி, வளைவுகளுக்கு இடையில் வேகமாக சென்று செங்குத்தான சரிவில் பல மரங்களுக்கு இடையில் சிக்கியது. காரில் இருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த இருவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பப்பட்டனர்.
603 ஹோர்ஸ்பவர் கொண்ட இந்த அரிய மிட்-எஞ்சின் சூப்பர் காரை மீட்டெடுக்க தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி வேர்களை அகற்றினர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வாகனம் சாலையில் இருந்து மீட்க சுமார் 3.5 மணி நேரம் ஆனது.
காரின் நிலை & விசாரணை:
வாகனத்தின் இடது பின்புறம் கடுமையாக சேதமடைந்துள்ளது. மிகக் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் கார்பன் ஃபைபர் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடலை சரிசெய்வது கடினம் என்பதால், விபத்து பெரும் நட்டமாகக் கருதப்படுகிறது.
ஜெர்மனியின் ஹெயில்ப்ரானில் பதிவு செய்யப்பட்ட இந்த காரின் உரிமையாளரின் விவரங்கள் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.