வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
நேற்று, ஜூலை 22 பகல் 12 மணி அளவில் தெலுங் பிளாங்கா கிரசென்டிங் பத்தாவது மாடியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவர் வீட்டிலேயே மாண்டு கிடந்துள்ளார்.
இந்த முதியவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
அவர் வேலைக்கு வராததை கவனித்த அவரது முதலாளி அந்த முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த முதியவரை காணவில்லை என்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
மாண்ட முதியவரின் வீட்டிற்கு வெளியே உள்ள பொது தாழ்வாரத்தில் துர்நாற்றம் வீசியதாக அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாண்டவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.
அண்டை வீட்டுக்காரர்களிடம் அவர் அவ்வளவாக பேசியதில்லை என்றும் தனியாக அமர்ந்து மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும் அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
மாண்ட முதியவர் அந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
மாண்ட முதியவரின் வீட்டிற்கு வெளியே இருந்து ஜூலை 20-இல் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக அந்த வீட்டிற்கு மேல் மாடியில் உள்ள முதியவர் தெரிவித்தார். ஆனால் வாடை எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை என்றார் அவர்.
முதியவரின் உடல் கண்டெடுப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னே அவர் மரணம் அடைந்திருக்க கூடும் என்றும் அண்டை வீட்டுக்காரர்கள் கூறினர்.