சிங்கப்பூரில் பார் சேர்க்கை மறுக்கப்பட்ட சட்டப் பட்டதாரியின் பெயர் வெளியீடு..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த கால திருட்டுத்தனம் மற்றும் தேர்வு முறைகேடுகளை வெளிப்படுத்த தவறியதற்காக பார் (Bar) சேர்க்கை மறுக்கப்பட்ட சட்டப் பட்டதாரியின் பெயரை சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் வெளிப்படுத்தினார்.
புலாரா தேவ்மினி சோமசந்திரா (Pulara Devmini Somachandra) என அடையாளம் காணப்பட்ட இவர், 2020 பார் தேர்வு மற்றும் பல்கலைக்கழகக் காலத்தில் திருட்டு செய்திருந்தார்.
பார் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போது இதை வெளிப்படுத்தாததால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டது.