பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆராயும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த 15 புகார்கள் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முதலாளர்களின் கவனக் குறைவால் 6 பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது.

அமைச்சகம், பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி செய்துள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை மேலும் மேம்படுத்த வேண்டுமா என கேள்வி கேட்கப்பட்டதற்கு, மனிதவள அமைச்சர் டான் சீலிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது,“ஒவ்வொரு பணிப்பெண்ணின் பாதுகாப்பும் நலனும் நமது முன்னுரிமை. பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.அவற்றை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று கூறினார்.