மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் . அவரது 17 வயது இரண்டாவது மகன் ஜூன் 11ஆம் தேதி இரவு தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அதன் பிறகு வெளியே சென்று விட்டு வீடு திரும்பவில்லை.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது.

பெண் ஆசிரியரின் கணவர் 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

அவரது கணவர் இறந்தபின் அந்த பெண் ஆசிரியை தனது மூன்று மகன்களுடன் சம்பவம் நடந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் வீட்டில் எப்போதாவது சண்டை சச்சரவுகள் கேட்கும் என்று கூறினர் .

ஜூன் 11 ஆம் தேதி இரவு அந்தப் பெண் ஆசிரியை இரண்டாவது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இரண்டாவது மகன் ஜூன் 12 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் தனது தம்பியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீடு திரும்பிய போது வீட்டின் அறையில் தனது தாயும் சகோதரனும் இறந்து கிடப்பதை கண்டார் . மேலும் அவரது தம்பிக்கும் முதுகில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் உடனடியாக உதவிக்கு காவல்துறைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைய மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் 17 வயதுடைய இரண்டாவது மகன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் , தேர்வகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தயார் அழுத்தம் கொடுத்ததால் 17 வயதுடைய இரண்டாவது மகன் விரக்தியடைந்ததாகவும் ,அதனால் இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த கொலையை அரங்கேற்ற 20 செ.மீ பேனா கத்தியைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.சந்தேக நபரின் பையில் இருந்து அந்த கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தை திருடனால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.ஆனால் cctv கேமரா காட்சிகளில் சந்தேக நபர் கூறியதைபோல் நடக்கவில்லை.காட்சிகள் வேறு மாதிரியாக இருந்தன.சந்தேக நபரான 17 வயதுடைய இரண்டாவது மகனை காவல்துறை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan