ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!!

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!!

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டையில் ஈடுபட்ட சிங்கப்பூர் நபருக்கு சுமார் 2760 வெள்ளி(9100 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் பதிவான காரை 40 வயதுடைய Cheng Kuan Poh Colin என்பவர் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த காரின் உரிமையாளரான 32 வயது Ng Yeow Meng இன் முகத்தில் எச்சில் துப்பி அவமானம் படுத்தியதாக செங் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த சம்பவம் ஜூன் 7 ஆம் தேதி நடந்தது.

நீதிமன்றத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மலேசியக் காருக்குப் பின்னாடி செங் காத்து கொண்டிருந்தபோதும் பல முறை ஹார்ன் அடித்ததாக காவல்துறை கூறியது.

இச்சம்பவத்தின் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டு வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan