வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது?
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற பன்னோக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட குடிவரவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் அதில் கடத்திவரப்பட்ட பெருமளவிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அதன் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு அதற்குள் சிகரெட் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் சட்டப்படி, வரி செலுத்தாத பொருட்களைக் கடத்துவது, விற்பது அல்லது வைத்திருப்பது என்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்படும் என்று ICA தெரிவித்துள்ளது.