பையில் இருந்த S$15.5 லட்சம் மாயம்..! ஆர்ச்சர்டில் 5 பேர் கைது!

பையில் இருந்த S$15.5 லட்சம் மாயம்..! ஆர்ச்சர்டில் 5 பேர் கைது!

சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் சுமார் S$15.56 லட்சம் பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 1 ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் Tang Plaza அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பணத்தை மாற்றிய பின்னர் அந்த நபர் தனது பையில் பணத்தை வைத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் பையின் ஜிப் திறந்திருப்பதை கவனித்தபோது, அதிலிருந்த பெருமளவு பணம் காணாமல் போனது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய 5 பேரையும் அதே நாளில் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் S$15.28 லட்சம் பணம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 31 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 பேரும் செப்டம்பர் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், திருட்டு குற்றத்திற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.