AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு!
சிங்கப்பூர்: உலகளவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்ப மிக அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், சிங்கப்பூரின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தனது கல்வி முறையில் மிக முக்கியமான புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் இணையும் அனைத்து இளநிலை மாணவர்களும்(Undergraduate) செயற்கை நுண்ணறிவு தொடர்பில் குறைந்தது 2 பாடங்களைக் கட்டாயமாக பயில வேண்டும்.
வேகமாக மாறி வரும் டிஜிட்டல் உலகிற்கும், வருங்கால வேலை சந்தையின் தேவைகளுக்கும் மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் இளநிலை படிப்பின் போது செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பரிணாமங்களைப் புரிந்து கொள்ளும் வகையில், இந்த 2 கட்டாயப் பாடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
1.முதல் பாடம்- ஏஐ அடிப்படைகள்(AI Literacy): முதலாம் ஆண்டிலேயே அனைத்து மாணவர்களுக்கும் இது கற்பிக்கப்படும். இதில் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ கருவிகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது, தரவுகளை எவ்வாறு கையாள்வது மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்ன என்பது கற்றுத்தரப்படும்.
2.இரண்டாவது பாடம் – துறை சார்ந்த மேம்பட்ட ஏஐ(Domain-Specific AI Application) : இப்பாடம் மாணவர்கள் பயிலும் முதன்மை துறைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக ஒரு மருத்துவ மாணவர் மருத்துவத் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும், கலை அல்லது வணிகத்துறை மாணவர்கள் தங்களின் துறைகளில் எவ்வாறு Al-யைப் புகுத்தலாம் என்பது குறித்து ஆழமாக கற்றுக்கொள்வார்கள்.
இந்த விதி கணினி அறிவியல் அல்லது தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவானது.
சட்டம், மருத்துவம், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், வணிகம் என எந்த ஒரு துறையைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும் அவர்கள் இந்த 2 ஏஐ பாடங்களை முடித்தால் மட்டுமே தங்களது பட்டத்தை பெற முடியும்.
ஏய் கருவிகளைப் பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றை எவ்வாறு பாதுகாப்பாகவும் நெறிமுறைகளோடும் கையாள வேண்டும் என்பதும் இப்பாடத்திட்டத்தில் முக்கிய பங்காக இடம்பெற்றுள்ளது. பதிப்புரிமைச் சிக்கல்கள், தவறான தகவல்கள் பரப்புவதை தடுத்தல், தரவு பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தற்போது உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு Al தெரிந்த ஊழியர்களை அதிகம் எதிர்பார்க்கின்றன. NUS -ன் இந்த புதிய உத்தியின் மூலம் இங்கு படித்து வெளியேறும் அனைத்து மாணவர்களும் தங்களது சொந்த பாடப்பிரிவோடு Al தொழில்நுட்பத்திரம் சிறந்த நிபுணத்துவம் அடைந்தவர்களாக திகழ்வார்கள். இது அவர்கள் உலகளாவிய வேலை சந்தையில் மற்றவர்களை விட ஒரு படி முன்னிலையில் இருக்க உதவும்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் தேசிய ஏஐ உத்தி -க்கு வலு சேர்க்கும் வகையில் இம்மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்வி திட்டம் சிங்கப்பூரின் உயர்கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.