சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.!

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.!

சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் மாலில் உள்ள டான் டான் டான்கி(Don Don Donki) கிளையில் வாங்கிய சுஷியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Xiaoqiangs’ Lover என்ற பயனர் பெயரைக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கிளையிலிருந்து ஒரு சுஷி வாங்கியுள்ளார்.

அதிலிருந்த இறால் சுஷியை சாப்பிட்ட எடுத்தபோது, அதன் சோறு உருண்டைக்குள் ஒரு சிறிய கரப்பான்பூச்சி மறைந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் மிகவும் அருவருப்படைந்த அவர், அந்த படத்தை சீன சமூக ஊடக பக்கமான ‘Xiaohongshu’ தளத்தில் பதிவேற்றி டான்கி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திருக்காக டான்கி நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பணத்தையும் திரும்பி வழங்கியதோடு, கூடுதலாக $50 மதிப்புள்ள டான்கி வவுச்சரையும் இழப்பீடாக வழங்கியுள்ளது.

உணவகம் தனது உணவு தயாரிக்கும் இடத்தை உடனடியாக ஆழமாக தூய்மைப்படுத்தியதோடு, பூச்சி கட்டுப்பாட்டு சோதனைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்ட பின்னர் தவறு இழைத்த உணவு நிறுவனத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என SFA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை அளிக்க விரும்புபவர்கள் சிங்கப்பூர் உணவு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.