சிங்கப்பூரில் Red Bull விற்பனைக்கு திடீர் தடை..? சூப்பர் மார்க்கெட்டுக்கு NEA அதிரடி உத்தரவு..முழு விவரம்..!!


சிங்கப்பூரின் Tuas South பகுதியில் அமைந்துள்ள Sadia Supermarket கடையில், BCRS டெபாசிட் குறியீடு இல்லாத Red Bull குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பானங்களை உடனடியாக விற்பனை செய்வதை நிறுத்துமாறு சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பான NEA உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி, Complaint Singapore என்ற Facebook பக்கத்தில் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், Tuas South பகுதியில் உள்ள தொழிலாளர் ஓய்வு மையத்தில் அமைந்துள்ள Sadia Supermarket கடையில் BCRS டெபாசிட் குறியீடு இல்லாத Red Bull பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய NEA, அந்தக் கடை இறக்குமதி செய்து விற்பனை செய்த Red Bull பானங்களில் BCRS டெபாசிட் குறியீடு அச்சிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரில் BCRS திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பானங்களின் கொள்கலன்களுக்கு 10 சிங்கப்பூர் காசுகள் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்கள் மற்றும் கேன்களைத் திருப்பி ஒப்படைப்பதன் மூலம் அந்தத் தொகையை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில், பழைய இருப்புகளை விற்றுத் தீர்ப்பதற்காகச் சில சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தைப் பயன்படுத்த Sadia Supermarket விண்ணப்பிக்கவில்லை என்று NEA தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, BCRS குறியீடு இல்லாத சம்பந்தப்பட்ட Red Bull பானங்களை உடனடியாக விற்பனை செய்வதை நிறுத்துமாறு கடைக்கு உத்தரவிடப்பட்டது. விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
NEA-வின் உத்தரவைத் தொடர்ந்து, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட Red Bull பானங்கள் அனைத்தும் அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் குறிப்பிட்ட கடையில் விற்பனை செய்யப்பட்ட BCRS குறியீடு இல்லாத Red Bull பானங்கள் தொடர்பானது என்றும், மற்ற தகுதியான பானங்களின் விற்பனைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் NEA தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் வழக்கம்போல் BCRS திட்டத்தின் கீழ் வரும் தகுதியான காலி பாட்டில்கள் மற்றும் கேன்களை மறுசுழற்சி இயந்திரங்களில் செலுத்தி 10 சிங்கப்பூர் காசுகள் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
