உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!!
காலையில் வேலைக்குச் செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு.
அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவசரமாக, வேகமாக சாப்பிடும்போது செரிமானமாகுவதற்கு போதுமான நேரம் உடலுக்கு கிடைப்பதில்லை.
அதன் வெளிப்பாடாக வயிறு உப்புசம், அஜீரணம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகலாம். உடலுக்கும் போதிய சக்தி கிடைக்காது. சாப்பிடத் தொடங்கும் முன்பு சில எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால் போதுமானது: