முக்கிய செய்தி: சிங்கப்பூரில் உள்ள கண்காட்சி கூடம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்காசிய கலை கண்காட்சி கூடம் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடக்கும் பெரிய மறு சீரமைப்பு பணி முதன் முதலில் இதுவாகும்.
தென் கிழக்காசிய கலை கண்காட்சி கூடத்தில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளன. கடந்த வருடம் கண்காட்சி கூடமானது அதனுடைய 10- வது ஆண்டு நிறைவு விழாவை மகிழ்ச்சிகரமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய கலைக்கூடத்தின் ரோட்டுண்டா நூலகமும் மற்றும் ஆவண காப்பகமும் இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை புதுப்பிப்பு பணிகள் காரணத்தினால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்களால் நேரடியாக நூலகத்திற்கு வர முடியாது. மார்ச் 8 ஆம் தேதி முதல் பொதுமக்கள் இணையதளம் மூலமாக முன்பதிவுகளை செய்து கொண்டு நூலகம் மற்றும் ஆவண காப்பகத்திற்கு செல்ல வழி வகுக்கப்பட்டுள்ளது.
இந்த மறு சீரமைப்பு பணிகள் காரணமாக தேசிய கலைக்கூடத்தினுடைய மற்ற பகுதிகள் ஏதேனும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் அதன் அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்துள்ளது.