சிங்கப்பூரில் ஏற்பட்ட கார் விபத்து..!! கோமா நிலையில் உள்ள முதியவர்..!!
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (மார்ச் 11) டாம்பனிஸ் அவென்யூ 12 இல், வெளியேறும் இடத்திற்கு முன்பாக செலேட்டர் விரைவு சாலைக்கு செல்லும் வழியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று ட்ரெய்லர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பயணிகள் காயமடைந்தனர். மேலும் 78 வயது முதியவர் விபத்து ஏற்பட்டதால் மயக்க நிலைக்குச் சென்றார். மற்றொரு நபரான 68 வயதுடைய பெண் சுயநினைவுடன் இருந்ததாக தெரியவந்தது.
இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு மார்ச் 11ஆம் தேதி பிற்பகல் 3:20 மணிக்கு தெரிந்ததாக கூறினர்.
சம்பவ இடத்திற்கு தற்காப்பு படையினர் துணை மருத்துவர்களுடன் வந்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக செங்காங் பொது மருத்துவமனை மற்றும் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விபத்து குறித்த காணொளி பதிவானது சமூக ஊடகத்தில் SG ROAD VIGILANTE என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த காணொளி பதிவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது பதிவாகி இருந்தது.
மேலும் டிரெய்லர் லாரியின் மீது இரண்டாவது முறையாக கார் மோதி காரினுடைய முன் பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்தது பதிவாகியுள்ளது.
விபத்து குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது 68 வயதான பெண் ஓட்டுனர் உட்பட மூன்று பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ள தகவல் தெரிந்ததாக காவல்துறையினர் கூறினர். மேலும் காவல்துறை விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.