சிங்கப்பூரில் பேருந்தின் மீது மோதிய கார்..!! வைரலாகும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் பேருந்தின் மீது மோதிய கார்..!! வைரலாகும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) மாலை முகமது ஃபர்ஹாத் என்ற பயனர் முகநூலில் பதிவிட்ட காணொளி பதிவு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் கருப்பு நிற செடான் கார் ஒன்று SMRT பேருந்தில் மோடியிடம் தெரியவந்தது. பேருந்தினுடைய பின்பக்க டயர்களுக்கு அருகே பக்கவாட்டில் இந்த கார் மோதியுள்ளது.

மேலும் இந்த வீடியோ பதிவில் சாலை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் கூட்டம் அதிகமாக கூடி இருப்பது தெரிகிறது. விபத்து நடந்த இடத்திற்கு உதவுவதற்காக குடிமை பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து செயல்பட்டதும் தெரிகிறது.

இதுகுறித்த சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினர் (SCDF), தங்களுக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) மாலை சுமார் 6:50 மணியளவில் சிம்ஸ் அவன்யூவில் ஒரு சாலை விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட போது அதில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. ஆனால் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்த போது அவர் வருவதற்கு மறுத்துவிட்டார்.

இந்த விபத்தில் சிக்கிய எஸ் எம் மாற்றி பேருந்து எண் 21 என்பது உறுதியானது இது குறித்து எஸ் பி எஸ் டிரான்சிட் பேருந்து நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பயணிகளை ஏற்று இறக்குவதற்காக சிம்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் திடீரென பக்கவாட்டில் ஒரு கார் மோதியது.

பேருந்து ஓட்டுநர் உட்பட எந்த பயணிகளுக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர மற்றொரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்ற விடப்பட்டனர் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK