சிங்கப்பூரில் டெலிவரி வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா..??
சிங்கப்பூரில் டெலிவரி வேலை எப்படி இருக்கும் அதன் சம்பளம் எவ்வளவு மற்றும் அதற்கான ப்ராசஸிங் எப்படி இருக்கும், அதில் வேலை எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சிங்கப்பூரில் நீங்கள் டெலிவரி வேலைக்கு செல்லும் பொழுது அந்த வேலையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு செல்வது சிறப்பு. இல்லை என்றால், நீங்கள் ஏஜெண்டிடம் கட்டிய பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்புகள் குறைவு.
குறிப்பாக டெலிவரி வேலையை பொருத்தவரை தற்பொழுது அதிகபட்சமாக E.Pass அல்லது S.Pass எடுக்கிறார்கள்.
டெலிவரி வேலையில் நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது எந்த மாதிரியான டெலிவரி வேலை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1. பார்சல் டெலிவரி! இதில் நீங்கள் சிறு சிறு பார்சல்களை டெலிவரி செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் இதில் நீங்கள் அதிகமான பார்சல்களை ஒரே நாளில் அதிகமான கட்டடத்தில் ஏறி டெலிவரி செய்ய வேண்டியது வரும்.
இதில் நீங்கள் பார்சலை தொலைத்து விட்டால் அதற்கு உங்கள் சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும். அதேபோல் இதில் வேலை மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அதன் எடை குறைவாகவே இருக்கும்.
2. கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்வது. இந்த வேலையில் நீங்கள் warehouse இல் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூருக்குள் இருக்கும் கடைகளுக்கு இறக்குமதி செய்ய வேண்டும். இதில் நீங்கள் தூக்க வேண்டிய பொருளின் எடை சற்று அதிகமாக இருக்கும். எனவே உங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் இருக்கும்.
இதில் இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூருக்கு டெலிவரி வேலைக்கு சென்றால் நிச்சயமாக டிரைவிங் லைசென்ஸ் எளிதாக எடுத்து விடலாம்.
இதில் நீங்கள் ஒரு பார்சலுக்கு இவ்வளவு என்று சம்பளம் வாங்கினால் அதில் உங்களுக்கு பெரிதாக எதுவும் சேமிக்க முடியாது. எனவே நீங்கள் மாத சம்பளம் பேசி சென்று விட்டு ஒரு குறிப்பிட்ட பார்சலுக்கு மேல் அதிகமாக நீங்கள் டெலிவரி செய்யும் பொழுது அதற்காக allowance ஐ நீங்கள் பெறும் பொழுது உங்கள் சம்பளம் சற்று உயரும்.
நீங்கள் டெலிவரி வேலை என்றால் எளிதாக இருக்கும் என்று நினைத்து சென்று விடாதீர்கள். நீங்கள் எதை டெலிவரி செய்ய வேண்டும், உங்களுக்கான வேலை நேரம் என்ன, அந்த வேலை நேரத்துக்குள் நீங்கள் உங்களுடைய வேலையை முடிக்கவில்லை என்றால் நீங்கள் அதிகப்படியாக பார்க்கும் நேரம் உங்களுடைய ஓவர் டைமிங்கில் கணக்காகுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால், நீங்கள் 12 இல் இருந்து 14 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டியது இருக்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது sgtamilan.com இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள்.