சிங்கப்பூரில் மினிமார்ட் வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் மினிமார்ட் வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பல வேலை வாய்ப்புகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மினி மார்ட் வேலை. மினி மார்ட் என்றால் கிட்டத்தட்ட நமது ஊரின் மளிகை கடை போல தான். இதற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் எப்படி செல்வது, இங்கு வேலை எப்படி இருக்கும் என்ற அனைத்து தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பல பேர் இந்த வேலையை பற்றி சரியாக தெரியாமல் சிங்கப்பூர் சென்று கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு இந்த வேலையை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதன்பின் நீங்கள் இந்த வேலைக்கு செல்வது சிறந்தது.

பலர் மினிமார்ட் வேலை என்றால், மிகவும் எளிதான வேலை என்று நினைத்துக் கொண்டு சிங்கப்பூர் செல்கின்றனர். ஆனால் இது மிகவும் கடினமான வேலை. இதில் செல்பவர்களிடம் மாத சம்பளம் ஆகவே பேசுகிறார்கள். இதற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் அதற்கு E.pass அல்லது S.Pass ல் செல்ல வேண்டும்.

இங்கு வேலை 12 மணி நேரம் இருக்கும் உங்களுக்கு மாத சம்பளமாக பேசுவதால் ஓவர் டைம் என்பது இருக்காது. அங்கே இந்த வேலை செய்பவர்கள் ஒரு சிலர் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வதாக கூறுகின்றனர்.

நீங்கள் மளிகை கடை வேலை என்றால் பொட்டலம் அடிப்பது, பணம் வாங்குவது போன்ற சிறிய வேலையாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் அரிசி மூட்டை போன்றவற்றை தூக்குவது போல் இருக்கும். பொருட்களை நீங்களே அடுக்க வேண்டும். ஒரு சில கடைகளைத் தவிர பல கடைகளில் ஒருவர் மட்டுமே அனைத்து வேலைகளையும் பார்ப்பது போல் இருக்கும். எனவே உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும்.

அதேபோல் இதற்கு விடுமுறையும் குறைவாகவே தருவதாக அங்கே வேலை செய்பவர்கள் சொல்கிறார்கள். ஒரு சிலருக்கு விடுமுறையே தருவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

இந்த வேலைக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு விடுமுறையும் குறைவாக கிடைப்பதால் சிங்கப்பூரில் உள்ள மற்ற கோர்ஸ்கள்(Course) அல்லது டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது இதுபோன்று எதுவுமே உங்களால் செய்ய முடியாமல் போகலாம்.

ஒரு சில கடைகளைத் தவிர பல கடைகளில் இதுதான் நிலைமை. எனவே நீங்கள் இந்த வேலைக்கு செல்ல விரும்பினால் கடினமான வேலையை பார்க்க தயாராக இருக்க வேண்டும். அதேபோல் விடுமுறையும் அதிகமாக கிடைக்காது. இவை அனைத்திற்கும் உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த வேலைக்கு செல்லலாம். இல்லையென்றால் வேறு வேலை பார்ப்பது சிறந்தது.

இந்தப் பதிவு சிங்கப்பூரில் இந்த வேலையில் இருக்கும் ஒரு சில நமது வாசகர்களின் கருத்து.

போன்ற முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு நமது இணையதள பக்கமான sgtamilan.com ஐ பார்க்கவும்.