சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு சட்டப்படி உரிமை உண்டு. இது குறித்த சிங்கப்பூர் மனித வள அமைச்சும(MOM) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதற்கான தகுதிகள் மற்றும் உரிமைகள் என்னென்ன? சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது தொடர்ந்து பணிபுரிந்தி பிறகுதான் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பிற்கான தகுதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
விடுப்பு நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஒரே கம்பெனியில் எவ்வளவு காலம் வேலை செய்துள்ளீர்கள் என்பதை பொறுத்து விடுப்பு நாட்களின் எண்ணிக்கையானது மாறும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான விவரங்கள் பின்வருமாறு: 3 மாதங்கள் பணி முடிந்த பிறகு: பகுதி அளவிலான விடுப்பு நாட்கள் கிடைக்கும். 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பணி முடிந்த பிறகு: முழுமையான விடுப்பு பலன்கள் கிடைக்கும். 14 நாட்கள் – சம்பளத்துடன் கூடிய வெளி நோயாளி மருத்துவ விடுப்பு
60 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மருத்துவமனை அனுமதி விடுப்பு (இதில் 14 நாட்கள் வெளி நோயாளி விடுப்பும் அடங்கும்)
விதிமுறைகள்: சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பை பெற ஊழியர்கள் பின்வரும் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். உடல்நிலை சரியில்லாத போது சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரிடம் அல்லது பல் மருத்துவரிடம் காண்பித்து முறையான MC பெற வேண்டும்.