சிங்கப்பூரில் டம்பைன்ஸ் வெஸ்ட் தேசிய தின விழா கொண்டாட்டம்..!! வாணவேடிக்கை இல்லாததால் குடியிருப்பாளர்கள் ஏமாற்றம்..!!

சிங்கப்பூரில் டம்பைன்ஸ் வெஸ்ட் தேசிய தின விழா கொண்டாட்டம்..!! வாணவேடிக்கை இல்லாததால் குடியிருப்பாளர்கள் ஏமாற்றம்..!!

சிங்கப்பூர்: டம்பைன்ஸ் வெஸ்ட் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பாரம்பரிய வாண வேடிக்கைகள் இடம்பெறவில்லை, அதற்குப் பதிலாக, லேசர் ஒளி மற்றும் இசை நிகழ்ச்சி,சிறிய வாணவேடிக்கைகள் நடைபெற்றன.

இதனாள் அங்கிருந்த சில குடியிருப்பார்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மசகோஸ் சுல்கிஃப்லி விளக்கம் அளித்துள்ளார், இந்த விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இம்முறை நிகழ்விடம் சிறியதாக இருந்ததாலும், பாதுகாப்பு காரணங்களாலும் வழக்கமான பெரிய அளவிலான வாணவேடிக்கைகள் கைவிடப்பட்டது.

அதற்குப் பதிலாக, லேசர் ஒளி- இசை நிகழ்ச்சி, சிறிய ரக வாண வேடிக்கை காட்சிகள் மட்டுமே இடம்பெற்றன.

வழக்கமான பிரம்மாண்ட வாண வேடிக்கையை எதிர்பார்த்து வந்த சிற குடியிருப்பார்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்களின் கருத்துகளை ஏற்பதாகக் கூறிய அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி, அடுத்தடுத்து ஆண்டுகளின் பெரிய அளவிலான வானவேடிக்கைகளை நடத்தப் பாதுகாப்பான,பொருத்தமான இடங்கள் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதற்கிடையில், மற்ற குடியிருப்பாளர்கள் திருவிழாவின் செயல்பாடுகள் கடந்த ஆண்டுகளைப் போலவே சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியுள்ளார். உணவு விநியோகம் சீராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டும், அமைப்பாளர்களின் முயற்சிகளை அங்கீகரித்தும் பேசியுள்ளார்.

இணையவாசியான, thomasoi_88 என்ற பயனர் பாரம்பரிய வாணவேடிக்கை நிகழ்ச்சி இல்லை என்றாலும், லேசர் விளக்குகள் மற்றும் சிறிய வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் உற்சாகமாக இருந்தது எனவும், மேலும் அது இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு தனித்துவமான அம்சத்தைச் சேர்த்தது எனவும் கூறியுள்ளார்.