சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி...! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..!
சிங்கப்பூரில் பணியில் இருந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் S$1,200 ரொக்கம் இருந்த பணப்பையை கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைக்க உதவிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது
Go-Ahead Singapore நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் Er Soon Beng, 72-ஆம் எண் பேருந்தை இயக்கியபோது பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்துள்ளார். அந்தப் பணப்பையில் S$1,200 ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பணப்பையை கண்டெடுத்த உடனேயே, அவர் அதனை முறையாகப் பாதுகாத்து, நிறுவனத்தின் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கான நடைமுறையின்படி பயணிகள் சேவை மையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, பணப்பையைத் தவறவிட்ட பயணி அதனை விரைவில் மீட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்தை Go-Ahead Singapore நிறுவனம் தனது Facebook பக்கத்தில் பகிர்ந்து, Er Soon Beng-ன் நேர்மை மற்றும் சிறந்த சேவை மனப்பான்மையைப் பாராட்டியுள்ளது.
பயணிகளை பாதுகாப்பாக அவர்களது இலக்கைச் சென்றடையச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவுவதும் முக்கியம் எனக் குறிப்பிட்ட நிறுவனம், Er Soon Beng போன்ற பணியாளர்கள் இருப்பது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.