தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏணியைப் பயன்படுத்தி மேலே ஏறி, தீயணைப்பான் மற்றும் தண்ணீர் குழாய் மூலம் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் SCDF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமையலறைகளில், குறிப்பாக உணவங்காடி மற்றும் உணவகங்களில் உள்ள புகை வெளியேற்றும் குழாய்களில் தீப்பற்றுவதைத் தடுப்பதற்கான உரிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு SCDF பொதுமக்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.