விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..?
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவங்களைத் திருடியதாக வெளிநாட்டினர் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.
இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் முறையே 37 வயது ஆஸ்திரேலியர் மற்றும் 50 வயது அமெரிக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு(2025) நவம்பர் 19ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இரண்டு வாசனைத் திரவக் கலன்கள் காணாமல் போனது ஊழியருக்குத் தெரியவந்தது.
அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த இரண்டு தனித்தனி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, ஆஸ்திரேலியர் மற்றும் அமெரிக்கர் ஆகிய இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.