சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா??
சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா??
சிங்கப்பூரில் பலவிதமான வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அதில் ஒரு சில வேலைகள் பலருக்கும் பிடித்தமாக வேலையாக உள்ளது.
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள PSAல் வேலை செய்வது பலரின் கனவாக உள்ளது.
இந்தப் பதிவில் சிங்கப்பூரில் PSA வேலையைப் பற்றிய முழு தகவலையும் பார்க்கலாம் அதற்கு எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவில் சொல்கிறோம் எனவே இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்.
சிங்கப்பூர் PSA(Port of Singapore Authority)என்பது சிங்கப்பூர் கடல் துறை சார்ந்த அமைப்பு ஆகும்.
இதில் வருடம் தோறும் பலபேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு உள்ளார்கள் இதில் என்ன வேலை கிடைக்கும் என்றால் அதிகமாக டிரைவர் வேலையும் , லேசிங் வேலையும் கிடைக்கும்.
நீங்கள் இதில் டிரைவர் வேலைக்கு செல்ல உங்களிடம் இந்தியா ஹெவி லைசென்ஸ் அல்லது பேட்ச் இருந்தாலே போதும். உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியவில்லை என்றாலும் அதற்கான பயிற்சியை சென்னையில் வழங்குகிறார்கள்.
அதேபோல் லேசிங் வேலை என்பது கப்பலில் உள்ள கண்டைனர்களை கப்பலில் இருந்து கீழே விழுகாமல் கட்டுவது போன்ற ஒரு வேலையாகும்.
இதற்கான பயிற்சியையும் சென்னையில் வழங்குகிறார்கள்.
இதற்கு சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இன்டர்வியூ எடுத்து செல்வார்கள்.
இந்த வேலைக்கு சென்றால் மாதம் குறைந்தபட்சம் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40,000 to ரூ.55,000 வரை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப முடியும்.
ஆனால் இதற்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தான் ஆட்கள் எடுப்பார்கள் அதே போல் இதற்கு இன்டர்வியூவும் மிகவும் கடினமாக இருக்கும்.
நீங்கள் பயிற்சிக்கு பணம் செலுத்தி தான் செல்ல வேண்டும் ஒருவேளை நீங்கள் இன்டர்வியூவில் தேர்ச்சி பெறவில்லை என்றால் நீங்கள் பயிற்சிக்கு கட்டிய பணம் வீணாகிவிடும்.
அதேபோல் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்றாலும் நீங்கள் சிங்கப்பூர் செல்ல சில மாதங்கள் ஆகலாம். ஆனால் நீங்கள் இந்த வேலைக்கு சென்றால் சிங்கப்பூரில் நிச்சயமாக நன்றாக சம்பாதிக்கலாம்.
எனவே தான் இந்த வேலைக்கு பலரும் முயற்சி செய்கின்றனர்.
இந்த வேலைக்கு ஆள் எடுக்கும் பொழுது பெரும்பாலும் சிங்கப்பூரில் இதற்கு முன் வேலை செய்யாதவர்களை தான் இந்த வேலைக்காக தேர்வு செய்கிறார்கள் எனவே நீங்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று வந்திருந்தால் இந்த வேலைக்கு நீங்கள் செல்ல முடியாது.
அதேபோல் உங்களுக்கு இங்கிலீஷ் பேசவும் புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
PSA வேலைக்கான தேர்வு சென்னையில் எப்பொழுது நடைபெறுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்.