இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா?
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா?
இந்தியா அதன் 79 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.
அதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி அவரது உரையை நிகழ்த்தினார்.
அதில் பூசல் காரணமாக மாண்ட ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியா இனிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ளாது என்றார்.
இந்தியாவின் அணு ஆற்றல் குறித்து பேசிய அவர் இந்தியா தன் நூறாம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்போது நாட்டின் அணுசக்தி திறன் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நூல் சில்லுக்கள் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்றும் வருங்காலத்தில் சுயமாக எரிசக்தி தயாரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
உலக சந்தையில் இந்தியாவின் நிலையை உயர்த்தவும் வலுப்படுத்தவும் உயர்தர பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த ஆண்டில் தீபாவளி பரிசாக பொருள் சேவை வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
முதன் முதலில் வேலைக்குச் செல்லும் இளம் வயதினருக்கு தனியார் துறையில் வேலை கிடைத்தால் அரசாங்கம் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் என்று அவர் அறிவித்தார்.
பண வீக்கம் இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பிற நாடுகள் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றன என்று இந்திய பிரதமர் குறிப்பிட்டார்.