யோகா ஏன் இன்றைய காலத்தில் அவசியமாகிறது தெரியுமா..? அறிவியல் சொல்லும் உண்மைகள்..!!

யோகா ஏன் இன்றைய காலத்தில் அவசியமாகிறது தெரியுமா..? அறிவியல் சொல்லும் உண்மைகள்..!!

சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) அனுசரிக்கப்படும் நிலையில், யோகாசனம் ஏன் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

நவீன நல்வாழ்வின் திறவுகோல்:
உடல் தோரணை, சுவாசம் மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நவீன நல்வாழ்வுக்கான திறவுகோலாக யோகா விளங்குகிறது.

உடல் இறுக்கத்தை விடுவிப்பதற்கும், மன அழுத்தத்தைக் கையாளுவதற்கும், நெகிழ்வுத்தன்மைய மேம்படுத்துவதற்கும் யோகா இன்றியமையாதது. உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான அணுகுமுறையை யோகா வழங்குகிறது.

உடல் ஆரோக்கியமும் வலிமையும்
நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமை: யோகாசனங்கள் மூட்டுகளில் சிரமத்தை ஏற்படுத்தாமல், தசைகளை மெதுவாக நீட்டி உடலுக்கு நெகிழ்வுத்தன்மையையும், வலிமையையும் உருவாக்குகின்றன.


வலி நிவாரணம்: யோகா பயிற்சியை வழக்கமாகப் பின்பற்றும்போது உடல் தோரணை குறைபாடுகளைச் சரிசெய்து, நாள்பட்ட முதுகு வலி மற்றும் கழுத்து வலியைப் போக்க உதவிடும்.

இரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பு: யோகாவின் சில ‘போஸ்கள்’ இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, ஓய்வு நேரத்தில் இதயத்துடிப்பைக் குறைக்கின்றன.

மன அமைதியும் அறிவியல் சான்றுகளும்
கார்டிசோல் அளவைக் குறைப்பதிலும், பதற்றத்தை நிர்வகிப்பதிலும் யோகா திறம்பட செயல்படுவதாக அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நல்ல தூக்கம்: தூங்கச் செல்லும் முன்பு பிராணாயாமம் செய்வது உடலை தளர்த்தி தூக்கத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

மனவளம் மற்றும் நினைவாற்றல்: யோகாவின் ஒரு அங்கமான கவனத்துடன் கூடிய சுவாசம் மற்றும் தியானம் மனக்குழப்பங்களை நீக்கி, இயற்கையாகவே கவனிக்கும் திறனையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.


ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
யோகாசனத்தைப் பின்பற்றினால் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களின் மீது ஆர்வம் ஏற்படுவது படிப்படியாகக் குறையத் தொடங்கிவிடும். எனவே, நல்வாழ்வு வாழ யோகாவை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவோம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK