விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!!

சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 5:00 மணி அளவில் ஒரு கார மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 24 வயதான பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்துக்குப் பிறகு கார் ஓட்டினால் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளார். தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திரெட்ஸ் தளத்தில் md_amaran_bd என்ற பயனர் ஒருவர் விபத்து குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில் விபத்து நடந்த இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஒரு பெரிய லாரியும் நின்று கொண்டிருக்கிறது.

 

சாலையில் 2 தலைக்கவசங்கள் சிதறி கிடப்பதும், அங்கிருந்த சக ஓட்டுநர்கள் உடனடியாக வாகனங்களை நிறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவ முன்வருவதும் தெரிகிறது.

சிங்கப்பூர் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி செல்வது என்பது உதவி வழங்க தவறிய கடுமையான குற்றமாகும்.

 

காவல்துறையின் தற்போது அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர் பிடிபட்டால் கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்துக்கு பின் வாகனத்தை நிறுத்த தவறியது, காயமடைந்தவருக்கு 24 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைக்க செய்ய தவறியது அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி காயம் விளைவித்தது போன்ற பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

காயமடைந்த அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.