சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரின் National Day நீண்ட விடுமுறையை முன்னிட்டு, Woodlands மற்றும் Tuas நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவார்கள் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என Immigration & Checkpoints Authority (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ICA வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், விடுமுறை நாட்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடியுரிமைச் சோதனை மற்றும் வாகன அனுமதி செயல்முறைகளில் கூடுதல் காத்திருப்பு நேரம் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், முடிந்தவரை அதிக நெரிசல் இல்லாத நேரங்களில் பயணம் செய்யவும் ICA அறிவுறுத்தியுள்ளது. மேலும், புறப்படுவதற்கு முன் Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகளின் நேரடி போக்குவரத்து நிலவரத்தைப் பார்த்து பயணம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், queue-cutting (வரிசையை மீறி செல்லுதல்) போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் ICA வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு சோதனைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக ICA தெரிவித்துள்ளது. எனவே, National Day விடுமுறையில் மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், போதுமான நேர இடைவெளியுடன் பயணத்தைத் திட்டமிடுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.