சிங்கப்பூர் இளையர்களுக்கு $500 உதவித்தொகை..!! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி, தங்களின் தனிப்பட்ட ஆர்வங்களையும் கலை, விளையாட்டு போன்ற பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்வதற்காக $500 மதிப்புள்ள ‘ஆர்வம் ஊக்குவிப்புத் தொகை’ (Curiosity Credits) திட்டத்தைச் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ‘தேசிய இளையர் மன்றத்தில்’ (SG Youth Forum) சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்த 5 ஆண்டுகளுக்கான தேசிய இளையர் திட்டத்தின் (SG Youth Plan) ஒரு முக்கிய அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: யார் பயன்பெறலாம்?: முதற்கட்டமாக, சுயஉதவிக் குழுக்களின் (Self-Help Groups – Mendaki, SINDA, CDAC போன்றவை) ஆதரவைப் பெறும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையர்களுக்கு இந்த $500 ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.
எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம்?: கலை மற்றும் இசை (Arts & Music) விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி (Sports) நவீனத் தொழில்நுட்பம் மற்றும் கணினித் திறன் (Technology) சமையற்கலை (Cooking) சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த பயிற்சிகள் (Sustainability)
நோக்கம்: இளையர்கள் பள்ளி வகுப்பறைகளைத் தாண்டி தங்களின் மறைமுகத் திறமைகளைக் கண்டறியவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
“எல்லாக் குழந்தைகளுக்கும் மற்றும் இளையர்களுக்கும் தங்களின் விருப்பமான துறைகளில் முன்னேறுவதற்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாகப் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் இளையர்களுக்கு உள்ள வாய்ப்பு இடைவெளியைக் குறைப்பது மிகவும் அவசியமானது என்று நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் ஹோ (David Hoe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், எதிர்காலத்தில் படிப்படியாக அனைத்து இளையர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இளையர் திட்டத்தின் (SG Youth Plan) பிற சிறப்பம்சங்கள்: வேலை அனுபவப் பயிற்சிகள் (Job Tasters): 👉இளையர்கள் பல்வேறு வேலைச் சூழல்களை நேரில் சென்று அறிந்துகொள்ள ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குறுகிய கால வேலை அனுபவ வாய்ப்புகள்.
👉இளையர் மையங்கள்: இளைஞர்கள் ஒன்று கூடித் கலந்துரையாடவும், சமூகத் திட்டங்களை உருவாக்கவும் புதிய இடங்கள் மற்றும் நிதி உதவிகள் ($20 மில்லியன் ஒதுக்கீடு).
இத்திட்டம் சிங்கப்பூர் இளையர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்த நேர்மறை எண்ணத்தையும், பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளைச் செய்வதற்கான ஆர்வத்தையும் பெருமளவில் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.