துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..??

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..??

துவாஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள் மூலம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 34 வயது மலேசியப் பெண் ஒருவரை, சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஆனது ஜூலை 26 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது.

மலேசியப் பதிவு எண் கொண்ட அந்த மோட்டார் சைக்கிளின் பல்வேறு ரகசிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தால் 400க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்த முன்கூட்டியே கிடைத்த உளவுத் தகவலின் படி, ICA அதிகாரிகள் அந்த மோட்டார் சைக்கிளைக் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


சோதனையின் போது இந்த கடத்தல் சிகரெட் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ICA தனது முகநூல் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 4) பதிவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணும், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் புகையிலை பொருட்களைக் கடத்துவதுவாங்குவது அல்லது வைத்திருப்பது என்பது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

இந்த வகை குற்றங்களுக்கு கடத்தப்பட்ட பொருட்களுக்கான வரி தொகையைப் போல 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அல்லது கார் போன்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.